பொங்கல் ரேசில் பிரபுதேவா - Traffics

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, 8 November 2017

பொங்கல் ரேசில் பிரபுதேவா


ஏற்கனவே பொங்கல் தினத்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விமலின் மன்னர் வகையறா மற்றும் விஷாலின் இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் சந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் ஸ்கெட்ச் படமும் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், புதுமுக இயக்குநர் எஸ்.கல்யாண் இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் குலேபகாவலி படத்தையும் பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் காமெடி படமாக உருவாகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடித்துள்ளார். இந்த படம் கடந்த 1955-ஆம் ஆண்டு டி.ஆர்.ரமணா இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான குலேபகாவலி படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் பாடல் ஒன்று ரூ.2 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இசையில் பாடல்கள் தயாராகி இருக்கின்றன. மேலும் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலி கான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here